கொரோனாவுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் தற்போது அனைத்துக் கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரைவில் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமடி அளிக்கப்படாது என தெரிகிறது. மேலும் வீரர்கள் இதுவரை கடைபிடித்து வந்த சில பழக்க வழக்கங்களும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன் படி சில விதிமுறைகள ஐசிசி வெளியிட்டுள்ளது.
நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
அம்பயர்களிடம் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை வீரர்கள் இனிமேல் தரக்கூடாது. சக வீரர்களிடமும் அவற்றைத் தர தடை செய்யப்படுகிறது.
நடுவர்கள் கையுறைகளைப் அணியவேண்டும்.
பயிற்சியின்போது சமூக இடைவெளியை வீரர்கள் பின்பற்றவேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.
உடலோடு உரசி வெற்றியைக் கொண்டாடும் விதத்தை வீரர்கள் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர், குளிர்பான பாட்டில்கள், துண்டு மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றை வீரர்கள் சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்தாமல் வியர்வையைப் பயன்படுத்தி பந்தை பளபளக்கச் செய்யலாம்.
பந்தைத் தொட்ட பிறகு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பந்தைத் தொட்ட வீரர்கள் அவரவர் மூக்கு, கண்கள், வாய் ஆகிய உறுப்புகளைத் தொடக் கூடாது.
விளையாட்டில் பங்கும் வீரர் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று உறுதியானாலோ உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
இதையடுத்து இரு அணி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.