கொரோனா காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்குப் பின்னர் நடக்க இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்பொதைய நிலையில் எதுவும் உறுதி இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அது குறித்து பேசியுள்ளார்.