ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜனின் பங்களிப்பு தமிழகத்திற்கு பெருமையாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெற்றிபெற்று நாடு திரும்பிய நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.