2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

vinoth

சனி, 18 அக்டோபர் 2025 (08:17 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா தொடரோடு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் “2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேன். அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவியாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவருக்குத் தற்போதைக்கு ஓய்வுபெறும் இல்லை எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்