இரண்டு சீட்டும் இரட்டை இலையும் போதும்! – டீலிங்கில் இறங்கிய கருணாஸ்!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (13:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரண்டு தொகுதி அளித்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு முடிவாகாமல் உள்ளது.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக கூட்டணிக்கு அதிமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளோம். கிடைத்தால் இரட்டை இல்லை சின்னத்திலேயே போட்டியிடவும் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்