தமிழனாய் பிறக்காவிட்டாலும் நான் தமிழன்! – கோவையில் ராகுல் காந்தி!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (12:09 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி முதலாவதாக கோயம்புத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதில் பேசிய அவர் ”நான் தமிழனாக பிறக்காவிட்டாலும் தமிழனாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். இங்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்கத்தை விட மக்கள் பிரச்சினைகளை கேட்டறியவே வந்தேன். என்ன ஆனாலும் தமிழ் மக்களை பிரதமரும், பாஜகவும் அவமதிக்க அனுமதிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்