தேர்தலுக்காக ஸ்டாலின் அலகு குத்தி.. தீ மிதிப்பார்! – செல்லூரார் கலாய்!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (12:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் தீ மிதிப்பார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கையில் வேல் ஏந்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலின் தேர்தலுக்காக திடீர் பக்திமானாக மாறிவிட்டார் என்ற வகையில் பேசி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கிண்டலாக பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ ”தேர்தல் நெருங்கும் சமயம் ஸ்டாலின் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு அலகு குத்தி தீ மிதிப்பார். ஆனால் அவர் விபூதி, குங்குமத்தை கீழே கொட்டி அவமரியாதை செய்ததை யாரும் மறக்கமாட்டார்கள்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்