ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வுக்கு முன்பாகவே உருவாகும் புதுப்பேட்டை 2 – செல்வராகவன் முடிவு!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:04 IST)
செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே புதுப்பேட்டை 2 உருவாகும் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கார்த்தி இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவ தெரிவித்து, இதன் போஸ்டரை புத்தாண்டுப் பரிசாகத் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிட்டார் செல்வராகவன்.

ஆனால் அந்த திரைபடம் 2024 ஆம் ஆண்டுதான் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் கலைப்புலி தாணு தயாரிக்கும் நானே வருவேன் படம் உருவாக உள்ளது. இதை முடித்துவிட்டு புதுப்பேட்டை 2 ஆம் பாகத்தை இயக்கும் முடிவில் உள்ளாராம் செல்வராகவன். அதன் பின்னரே ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்