நடராஜனால் இந்த பவுலரின் இடத்துக்குதான் ஆபத்து – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (11:07 IST)
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜனால் முகமது ஷமியின் இடத்துக்குதான் ஆபத்து என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் தனது அணியில் தனது இடத்துக்கான முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீச பூம்ராவுக்கு துணையாக ஒரு பவுலர் கிடைத்துள்ளார். குறுகிய ஓவர் போட்டிகளில் நடராஜன் இனி அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வரணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் ’நடராஜனின் வருகையால் முகமது ஷமியின் இடத்துக்குதான் ஆபத்து. அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரை குறுகிய ஓவர் போட்டிகளில் வைத்து விளையாட அணி நிர்வாகம் விரும்பும். அதனால் ஷமியின் இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்