இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் பெற்ற மோசமான தோல்வி காரணமாக மூத்த வீரர்களை கழட்டிவிடும் முனைப்பில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான சபா கரிம் கூறியுள்ள கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இருவர் பற்றியும் அவர் “விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அருமையான ஐபிஎல் சீசனைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன அப்படி நடந்தால், தேர்வாளர்கள் அவர்களை எடுக்காமல் இருக்க முடியாது. கடந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் விஷயத்திலும் இதேதான் நடந்தது. இருப்பினும், தற்போது அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆம், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால் அவர்களை பரிசீலிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக கோலி திகழ்ந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படி இருக்கையில் கோலிக்கு ஐபிஎல் மூலமாக சோதனை வைக்கப்படும் என சொல்வது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.