1st ODI : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் வெற்றி

செவ்வாய், 10 ஜனவரி 2023 (21:23 IST)
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்றைய முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஷனகா தலைமையிலான இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது, 50  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373  ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 374 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இந்த இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங் செய்தது.

இதில், நிஷாங்கா 72 ரன்களும், அசலங்கா 23 ரன்களும், சில்வா 47 ரன்களும், ஷனகா 102  ரன்களும் ஹசரங்கா 16 ரன் களும் அடித்தனர்.
 

ALSO READ: 3வது டி-20 போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி!
 
எனவே 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில், சமி , பான்ட்யா, சாஹல் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சிராஜ் 2 விக்கெட்டுகளும், மாலிக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்