தோனிக்குப் பின் அந்த சாதனையைப் படைத்தது பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (10:13 IST)
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.  பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19 ஆவது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

இந்த வெற்றியின் மூலம் தன் தலைமையேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2007 ஆம் ஆண்டு இந்திய அண்யின் முன்னாள் கேப்டன் தோனி படைத்திருந்தார். அதே போல ஐசிசி டி 20 கோப்பையை வென்ற விக்கெட் கீப்பர் கேப்டன்களாக பட்லர் மற்றும் தோனி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்