பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:09 IST)
பரபரப்பான இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.
அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து என்பது உறுதிசெய்யப்பட்டது
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்