ஒரு சகாப்தம் முடிவடைகிறது…ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (07:43 IST)
2002 ஆம் ஆண்டு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் தற்போது 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “என் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு. இந்த கோடையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். வெஸ்ட் இண்டீஸோடு லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியே கடைசி போட்டி. என் நாட்டிற்காக 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சி.

இது ஒரு கடினமான முடிவென்றாலும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவு. நான் என் நாட்டிற்காக சாதித்ததை போல மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  அவர்களுக்கு வழிவிட இது சரியான நேரம்” எனக் கூறியுள்ளார். ஆண்டர்சனிடம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெல்க்கல்லம் அணியின் எதிர்காலத்தைக் கருத்துக்கொண்டு இந்த முடிவை எடுக்கத் தூண்டியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்