ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்னர் இந்த தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது.
இந்நிலையில் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹை வோல்டேஜ் போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்க உள்ளது.
இந்த போட்டி இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று மைதானம் இருக்கும் பகுதியில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.