அதே போல இந்திய அணிக்குத் தலைமை தாங்கி டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட பட்டங்களையும் வென்று கொடுத்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஞாபக மறதி சொதப்பல் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது டாஸ் வென்றால் பந்துவீசவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் டாஸ் வென்றுவிட்டு நான் பேட் செய்ய போவதாக அறிவித்து விட்டேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே என்னிடம் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டார்.