சமநிலையில் IND - ENG: 3வது டெஸ்ட் யாருக்கு கைக்கொடுக்கும்?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (08:44 IST)
இன்று அகமதாபாத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக 3வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 

 
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி இன்று அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக 3வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 
 
இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதல் டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்