IND-NZ அரையிறுதிப் போட்டி: மிட்செல் அதிரடி சதம்....ஜெயிக்கப் போவது யார்? அனல் பறக்கும் ஆட்டம்!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (20:57 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியாவின் ரோகித் சர்மா 47 ரன்கள் அடித்த நிலையில் விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி இருவரும் சதம் அடித்தனர். சுப்மன் கில் 80 ரன்கள், கே எல் ராகுல் 39 ரன்கள் அடித்தனர்

இதையடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு கட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் 398 என்ற இலக்கை நோக்கி  நியூசிலாந்து விளையாடி வருகிறது.

இதில், கான்வே 13 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 13 ரன்னும் எடுத்து அவுட்டாகினார். வில்லியம்சன் அரைசதம் அடித்து 69 ரன்னில் அவுட்டாகினார். ட் இவரும் ஜோடி சேர்ந்து ஆடிய மிட்செட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 85 பந்துகளில்  100 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்தியா சார்பில் ஷாமி 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார். எனவே32.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து நியூசிலாந்து விளையாடி வருகிறது. ரன்களை கட்டுப்படுத்தினால் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்