கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Siva

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (21:36 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் கேவலமாக விளையாடியதை தொடர்ந்து, ரசிகர்கள் முதல் பாதி முடிந்த உடனே மைதானத்தை விட்டு வெளியேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தில் இறங்கியது.

ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்கு மோசமான சூழ்நிலை உருவானது. தொடக்கக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய  இருவரும் சொற்பரங்களில் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை. ஒட்டுமொத்தமாக பேட்டிங் பகுதி சொதப்பலால் நிரம்பியது.

இதன் விளைவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்த மோசமான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், பலர் மைதானத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். "ஆரம்பத்திலேயே முடிவு தெரிந்துவிட்டது. இனிமேல் இந்த மேட்சை பார்த்து என்ன ஆகப்போகிறது?" என்ற  பல ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தல தோனி கேப்டனாக இருந்த போதிலும், அணியின் இந்தத் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் காரணமாக, இந்த சீசனில் சிஎஸ்கே கடைசி இடத்தைப் பிடிக்கும் என்ற கவலையும் ரசிகர்களிடம் நிலவுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்