இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் சந்தித்தபொஅது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தனர். அப்போது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதன்பின் விரைவில் உங்கள் ஆர்வம் மற்றும் திறமையால் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்தச் சிறுவன் விராட் வீரராக வளர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.