உலகக்கோப்பை அரையிறுதி: 400 ஐ நெருங்கிய இலக்கு.. சமாளிக்குமா நியூசிலாந்து..
புதன், 15 நவம்பர் 2023 (17:59 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 47 ரன்கள் அடித்த நிலையில் விராட் கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி இருவரும் சதம் அடித்தனர். சுப்மன் கில் 80 ரன்கள், கே எல் ராகுல் 39 ரன்கள் அடித்தனர்
இதையடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு கட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் 398 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.
உலக கோப்பையில் கிட்டத்தட்ட 400 ரன்கள் இலக்கு என்பது மிகவும் கடினமானது. அதுவும் இந்தியாவில் உள்ள பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் அபாரமான பந்து வீச்சாளர்களுக்கு எதிரே 400 ரன்கள் எடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்