சதத்தை நூலிழையில் மிஸ் செய்த மார்ஷ்.. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவின் இலக்கு..!

புதன், 27 செப்டம்பர் 2023 (17:18 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும் லாபு சாஞ்சே 72 ரன்களும் அடித்தனர் என்பதும் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 353 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்