நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இவர் கிறிஸ் கெய்ல் அடித்த 18 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில், வெறும் 51 பந்துகளில் அதிரடியாக 151 ரன்கள் குவித்து, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 19 சிக்ஸர்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 269.08 ஆக இருந்தது. எம்எல்சி டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் எடுக்க, வாஷிங்டன் ஃபிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.