கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார். அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர். இந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சிராஜ் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.