ரஷ்ய அதிபர் புதினிடம் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைனுடனான போரை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த மூன்று நாடுகளுக்குத்தான் பாதிப்பு என நேட்டோ பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதினுக்கு போன் செய்து இந்தியா, சீனா, பிரேசில் அதிபர்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும், இல்லையென்றால் மேற்கண்ட மூன்று நாடுகளுக்கும் வரிவிதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.
ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ரஷ்யாவுடன் அதிக அளவு இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் தான் வர்த்தகத்தில் இருக்கும் நிலையில், இந்த மூன்று நாடுகளுக்கும் நேட்டோ பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.