இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக படைக்காத சாதனைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், நூறு சர்வதேச சதங்கள் என அவரின் சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு கிரிக்கெட்டை விட்டு தள்ளியே இருந்து வருகிறார். சுற்றுலா செல்லுதல், வாழ்வின் இதர விஷயங்களை ரசித்தல் என கடந்த 10 ஆண்டுகளை அவர் கழித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.