முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

Siva

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (08:04 IST)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
 
தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் ஐந்து போட்டிகளிலும், தொடர்ச்சியாக 50+ ரன்கள் அடித்து இவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
 
அவர் அடித்த ரன்கள் விவரம்:
 
நியூசிலாந்துக்கு எதிராக (லஹோர்): 150
 
பாகிஸ்தானுக்கு எதிராக (கராச்சி): 83
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (கெய்ர்ன்ஸ்): 57
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (கெய்ர்ன்ஸ்): 88
 
இங்கிலாந்துக்கு எதிராக (லார்ட்ஸ்): 85
 
இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், முதல் ஐந்து போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூ ப்ரீட்ஸ்கி பெற்றுள்ளார். இந்த உலக சாதனைக்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்