என் பக்கத்தில் நிற்பவர் கேப்டன் பொறுப்புக்கு தயாராக இருக்கிறார்… சச்சின் பற்றி ஹர்ஷா போக்லே பகிர்ந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:27 IST)
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

மூத்த வீரரான கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய போது மீண்டும் சச்சின் டெண்டுல்கரையே கேப்டனாக்கலாம் என பிசிசிஐ ஆலோசித்துள்ளது. இது சம்மந்தமாக சச்சினிடம் பேசிய போது “நான் இப்போது ஸ்லிப்பில் இருக்கிறேன். எனக்கு பக்கத்தில் இருப்பவர் கேப்டன் பொறுப்புக்கு தயாராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தோனியைப் பற்றி அவர் அவ்வாறு கூறியதன் காரணமாகவே தோனிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யுடியூப் சேனலில் நடந்த ஒரு உரையாடலில் அவர் இந்த சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்