பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

vinoth

வியாழன், 10 ஜூலை 2025 (08:18 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பைக் கூட அவரால் ஏற்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய அவர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடிய போட்டிகளை விட விளையாடாத போட்டிகளில்தான் இந்திய அணி அதிக வெற்றி பெற்றுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் இணையத்தில் பரவி வருகிறது.

பும்ராவின் டெஸ்ட் அறிமுகத்துக்குப் பிறகு அவர் விளையாடியுள்ள 46 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றியும் 22 போட்டிகளில் தோல்வியும் 4 போட்டிகளில் டிராவும் பெற்றுள்ளது. இதில் வெற்றி சதவீதம் 43. அதே நேரம் பும்ராவின் அறிமுகத்துக்குப் பிறகு அவர் இல்லாத 27 போட்டிகளில் 19ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 70. ஆனால் பும்ரா இல்லாத போட்டிகள் பெரும்பாலும் இந்தியாவில் நடந்தவை என்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமில்லாத அணிகளோடு நடந்த போட்டிகள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்