ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

Siva

வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:01 IST)
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அணி குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஒருசில முன்னணி வீரர்களை அணியில் சேர்க்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
 
இந்த விமர்சனங்களுக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். "ஒரு தொடருக்கான அணியில் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதே நேரத்தில், 11 பேரால் மட்டுமே விளையாட முடியும். 
 
அணி தேர்வுக்கு முன்பு வீரர்கள் குறித்து நாம் பலவித கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால், அணியை தேர்வு செய்த பின் நாம் முழுமையாக அந்த அணியை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்த அணி தேர்வு ஒரு நல்ல முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்