டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து அவருக்கு மீண்டும் டி 20 உலகக்கோப்பையில் மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அவர் டி 20 உலகக்கோப்பையில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஆனால் அணியில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இருக்கிறார். இதனால் இருவரில் யாரை அணியில் களமிறக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் “நான் கண்டிப்பாக ரிஷப் பண்ட்டையே தேர்வு செய்வேன். அவர்தான் எந்த இடத்திலும் ஆடக் கூடிய வீரர். தினேஷ் கார்த்திக் 10 முதல் 12 பந்துகள் விளையாடுவதையே விரும்புகிறார். அவருக்கு அணியில் வேலை என்ன” எனக் கேள்வி எழுப்பும் விதமாகக் கூறியுள்ளார்.