“கோலியுடனான எனது உறவு ரசிகர்களுக்கான மசாலாவாக இருக்காது” – கம்பீர் ஓபன் டாக்!

vinoth
வெள்ளி, 31 மே 2024 (08:15 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரிடம் கோலி உடனான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “எனக்கும் கோலிக்குமான உறவு குறித்து ரசிகர்கள் அறியத் தேவையில்லை. உங்கள் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு தொலைவில் இருக்கின்றன. உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னைப் போலவே அவருக்கும் இருக்கிறது. எங்களுக்கு இடையிலான உறவு ரசிகர்களின் கருத்துகளுக்கு மசாலா பூசும் உறவாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக அவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டியின் போது இருவரும் கட்டியணைந்து கொண்டு சமாதானம் ஆகினர். அதுபற்றி கோலி பேசும்போது ““நான் நவீன் உல் ஹக்கையும் கம்பீரையும் கட்டிப்பிடித்தது பலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் சிறுவர்கள் இல்லை. பிரச்சனைகள் முடிந்துவிட்டன” எனக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்