ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்னும் விராட் கோலி அமெரிக்கா செல்லவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர், “ரோஹித் சுழல்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். அதனால் அவருக்கு மூன்றாவதாக அல்லது நான்கவதாக ஆடலாம். அவருக்கு அதில் சிரமம் இருக்காது.” எனக் கூறியுள்ளார்.