கோலி இல்லாமல் உலகக் கோப்பையா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

vinoth
புதன், 13 மார்ச் 2024 (07:47 IST)
கடந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியுயார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை அணியில் எடுக்காமல் இருக்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்களின் தன்மை கோலியின் பேட்டிங் பாணிக்கு சரிவராது என்பதால் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவரை அணியில் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ- ஐ கண்டித்து பதிவுகளை இட்டு வருகின்றனர். ஸ்டுவர்ட் பிராட் போன்ற முன்னாள் வீரர்களும் இந்த முடிவு தவறான ஒன்று எனக் கூறி வருகின்றனர். கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்