தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை மார்ச் 15 க்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் ஏன்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று SBI-ஐக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
எஸ்.பி.ஐ வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவர் ஆதிஸ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.