இந்த ஆண்டு RCB அணியை தூக்கி நிறுத்தும் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை மிகவும் பாஸிட்டிவ்வாக தொடங்கியுள்ளது RCB அணி. இதுவரை நடந்த 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்வதற்கு பக்கத்தில் இருக்கிறது. இந்த முறை RCB அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய தூணாக இருப்பவர் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியில் புகுந்து விளாசுகிறார். கடைசியாக நடந்த போட்டியில் கூட 8 பந்துகளில் 30 ரன்களை விளாசி வானவேடிக்கைக் காட்டினார்.
இந்நிலையில் அவரது இந்த சீசனின் அதிரடி ஆட்டத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக RCB அணியின் சமூகவலைதளப் பக்கத்தில், சமீபத்தைய பிளாக்பஸ்டர் திரைப்படமான கேஜிஎஃப் 2 படத்தின் ஹீரோ ராக்கி போல அவரை சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.