ஐபிஎல் தொடரி இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் ஆர் சி பி வீரர் லார்மோர் பேட் செய்த போது ஜோசப்பின் பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற டேவிட் மில்லர் கேட்ச் பிடித்தார். ஆனால் தொலைக்காட்சி ரிப்ளேவில் பந்து மைதானத்தின் குறுக்கே சென்ற கம்பியில் மோதியதால் டெட்பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் லாம்ரோர் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவர் மீண்டும் அதே மாதிரி டேவிட் மில்லர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.