பெங்களூர் அணிக்குப் பெரும் பின்னடைவு…காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

vinoth

வியாழன், 8 மே 2025 (06:51 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அப்படி ஒருவராக இந்த சீசனில் கலக்கியவர்தான் தேவ்தத் படிக்கல். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் 150 ஸ்ட்ரைக் ரேட் என்ற வீதத்தில் 247 ரன்கள் சேர்த்து முன்வரிசை பேட்டிங்கை வலுவாக வைத்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக, அவருக்குப் பதில் மயங்க் அகர்வால் ஆர் சி பி அணியில் இணையவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்