உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்திய வருகை வரும் டிசம்பர் 13 முதல் 15 வரை உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெஸ்ஸி தனது பயணத்தின் போது, கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். இந்த நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள், குறிப்பாக வட இந்திய நகரங்களில் உள்ள ரசிகர்கள், மெஸ்ஸியை நேரில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அவரது பயண திட்டத்தில் தென்னிந்தியாவில் ஒரு இடம் கூட இடம்பெறவில்லை என்பது தென் மாநில ரசிகர்களுக்குச் சிறிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.