கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

vinoth

புதன், 7 மே 2025 (12:30 IST)
சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரில் அவர் ஆர் சி பி அணிக்காக விளையாடி வரும் இந்த ஆண்டு அவரின் செயல்பாடும், ஆர் சி பி அணியின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆர் சி பி அணிக் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர் சி பி ரசிகர்கள் மூவர் விராட் கோலியின் கட் அவுட் முன்பு ஆடு ஒன்றை பலியிட்டு அதன் இரத்தத்தைக் கோலி மீது பாய்ச்சியடித்துள்ளனர். இந்த செயல் கண்டனங்களைப் பெற்றதையடுத்து அந்த சனா பாலையா, ஜெயண்ணா மற்றும் திப்பே சுவாமி ஆகிய மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்