ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

சனி, 16 ஆகஸ்ட் 2025 (14:48 IST)
அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள ரோஹித் ஷர்மா தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் இந்திய அணி வீரருமான யோக்ராஜ் சிங் இதுபற்றி பேசுகையில் “பிசிசிஐ ரோஹித் ஷர்மாவிடம் பேசி அவரை மேலும் 5 ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும். அவருக்கு அந்த தகுதி உண்டு. அவரால் 45 வயது வரை சிறப்பாக விளையாட முடியும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்