விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் விஜய்யின் கதாப்பாத்திரம் பெயர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் வைரலாகியுள்ளன.
நடிகர் விஜய் நீண்ட காலமாக தனது அரசியல் பயணத்திற்கான அடிதளம் போட்டு வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து வேகமாக இயங்கி வருகிறார்.
அரசியல் பணிகளை சினிமா பயணம் தடுக்கக் கூடாது என்பதால் தான் மொத்தமாக சினிமாவை விட்டு விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அதனால் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என கூறப்படுகிறது.
அதனால் இந்த படத்திற்காக ரசிகர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் இந்த படம் முழுவதும் விஜய்யின் அரசியல் கருத்துகள் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் உள்ளிட்டவை குறித்து ரசிகர்களிடையே பேசப்பட்டு வரும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அதன்படி, இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என்று வைக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆங்கிலத்தில் சொன்னால் Thalapathy Vetri Kondan. சுருக்கினால் TVK என அவரது கட்சி பெயர் வருகிறது. அதுபோல தனது கட்சி சின்னமான வாகை பூவை விஜய் இந்த படத்தில் கையில் டாட்டூவாக குத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
Edit by Prasanth.K