சென்னைக்கு வந்ததால் பரவியதா கொரோனா? – முடங்கி கிடக்கும் சிஎஸ்கே வீரர்கள்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:00 IST)
அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் விளையாட சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டதால் கொரோனா பரவியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லாததால் அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகளுக்காக அமீரகம் சென்ற சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் சிஎஸ்கே அணி பயிற்சிகள் மேற்கொள்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 19ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே பங்கு பெறாது என்றும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மோத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி முடிந்து திரும்பிய சில நாட்களிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையிலிருந்துதான் அவர்களுக்கு கொரோனா பரவியிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்