தமிழில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு அக்கட தேசத்திலேயே செட்டில் ஆனார். இப்போது அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்திவரும் சமந்தா, தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக சாட் செய்த அவரிடம் ஏடாகூடமான கேள்வி ஒன்று ரசிகரால் கேட்கப்பட்டது. அதில் தொப்புளில் தோடு அணிவது குறித்து உங்கள் கருத்து என்ன எனக் கேட்க. அதற்கு பதிலளித்த சமந்தா ‘அது தவறானது. நீங்கள் அதைப்பற்றி நினைத்தால் உடனடியாக அப்படி யோசிப்பதை நிறுத்திவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.