இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக போராடியும், இன்னொரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்தது. அதேபோல், இந்தியாவும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கியது.
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் ஏமாற்றிய போதிலும், ரவீந்திர ஜடேஜா கடைசிவரை வெற்றிக்காக போராடினார். அவர் 61 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இன்னொரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால், இந்தியா 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.