அழுது அடம்பிடித்த கிரிஸ் கெயில்.. குலுங்கி சிரித்த UMPIRE.!! வைரல் வீடியோ

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (11:47 IST)
அம்ப்பயரிடம் கிரிஸ் கெயில் குழந்தை போல் அழுது அடம்பிடிப்பது போலும், அதை பார்த்த அம்ப்பயர் குலுங்கி சிரிப்பது போலும் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆஃப்ரிக்காவில் Mzansi super league (MSL) நடைபெற்று வரும் நிலையில் ஜோசி ஸ்டார் அணியும் பார்ல் அணியும் 13 ஆவது போட்டியில் மோதின. இதில் ஜோசி ஸ்டார் அணியில் கிரிஸ் கெயிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் போட்டியின் முதல் ஓவரில் கிரிஸ் கெயில் வீசிய பந்து, பேட்ஸ்மேன் ஹென்ரி டேவிட்டின் தொடையில் பட அம்ப்பயரிடம் LBW கேட்டார். ஆனால் அம்ப்பயர் கொடுக்க மறுத்துவிட்டார். உடனே  அம்ப்பயரிடம் அவுட் கொடுக்குமாறு குழந்தை போல அழுது அடம்பிடித்தார். இதனை கண்ட அம்ப்பயருக்கு சிரிப்பை அடக்கமுடியவில்ல. இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்