ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர் விலகல்… கேமரூன் க்ரீனுக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:38 IST)
உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் இங்லிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பின்ச் கேப்டனாக செயல்படும் கடைசி சர்வதேச தொடர் இப்போது நடக்கும் உலகக்கோப்பை தொடர்தான். உலகக்கோப்பை தொடருக்காக ஆஸி அணி தயாராகி வந்த நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் இங்லிஸ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்