எங்கள் ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:20 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் தகுதி பெற தகுதி தவறிவிட்டது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்ரன் நிக்கோலஸ் பூரன் “இது கடினமானது, இந்த போட்டியில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஒரு நல்ல பேட்டிங் களத்தில், 145 ரன்கள் எடுப்பது, பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாக இருக்கும். அயர்லாந்துக்கு வாழ்த்துக்கள், அவர்கள் இன்று அருமையாக பேட்டிங் செய்து சிறப்பாக பந்துவீசினார்கள். நிறைய பாசிட்டிவ்கள் உள்ளன, ஜேசன் நன்றாக பந்துவீசுகிறார், கிங் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். இது எங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம். நாங்கள் எங்கள் ரசிகர்களையும் நம்மையும் ஏமாற்றிவிட்டோம். கண்டிப்பாக வலிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்