இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ராக்கி. இப்படம், வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
தற்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேர்ஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் படம் ஒட்டுமொத்தமாக ரூ.80 கோடி வியாபாரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை தனுஷ் நடித்துள்ளா படங்களில் அதிக தொகைக்கு விற்க்கப்பட்ட படம் கேப்டன் மில்லர் என்ற தகவலும் வெளியாகிறது.
ஏற்கனவே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும், நானே வருவேன் படமும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், கேப்டன் மில்லர் படத்திற்கான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.