2013 க்கு பின் ஏன் ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை – இந்திய வீரர் பதில்!

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (08:54 IST)
2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி நடத்தும் எந்தவொரு கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்ல. இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை வென்றது. அதன் பின்னர் நடந்த டி 20 உலகக்கோப்பை மற்றும் 50 ஒவர் உலகக்கோப்பை என எதையும் வெல்லவில்லை. இத்தனைக்கும் இந்திய அணி மிகவும் வலுவான உலகத்தரம் வாய்ந்த அணியாகவே உள்ளது.

இந்நிலையில் ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற கேள்விக்கு புவனேஷ்வர் குமார் பதிலளித்துள்ளார். அவரது பதிலில் ‘நாங்கள் எல்லா தொடரிலும் சிறப்பாக விளையாண்டு வருகிறோம். ஆனால் நாங்கள் கோப்பையை வெல்ல முடியாததற்கு துரதிர்ஷ்டமே காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்